பழங்களுடன் பள்ளத்தில் கவிழ்ந்த கெப் வாகனம்!
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் ஆணைக் கொய்யா பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று (16) அதிகாலை 4 மணியளவில் ஹட்டன் - ஸ்த்ராடன் தோட்டம் பகுதியில் நிகழ்ந்தது.
விபத்தில் கெப் வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்தவர்களில் ஒருவரும் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பகுதியில் உள்ள தோட்டங்களில் இருந்து ஆணைக் கொய்யா பழங்களை வாங்கி கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற போது கெப் வாகனத்தில் நான்கு பேர் பயணித்ததாக விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
பழங்களுடன் பள்ளத்தில் கவிழ்ந்த கெப் வாகனம்!
Reviewed by Vijithan
on
May 16, 2025
Rating:

No comments:
Post a Comment