ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் பிரசார கூட்டம்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் பிரசார கூட்டம் இன்றைய தினம் (3) மாலை 6 மணியளவில் மன்னார் பெரியகமம் பகுதியில் இடம்பெற்றது.
மன்னார் நகர சபை முதன்மை வேட்பாளர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் ,எஸ்.வினோ நோகராதலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ்,ரெலோ கட்சியின் மத்திய குழு உறுப்பினர் லுஸ்ரின் மோகன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டதோடு,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் நகர சபை வேட்பாளர்கள்,ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment