மன்னார் பரப்புக் கடந்தான் கிராமத்தில் இரவு புகுந்த காட்டு யானைகளினால் பல தென்னை மரங்கள் அழிப்பு.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்புக் கடந்தான் கிராமத்தில் நேற்று (10) இரவு புகுந்த காட்டு யானைக் கூட்டம் பல தென்னை மரங்களை அழித்துள்ளது.
அழிக்கப்பட்ட தென்னை மரங்கள் அனைத்தும் 16 வயதுடையது என தெரிய வருகின்றது.
தொடர்ச்சியாக இக் கிராமத்தில் பல பகுதிகளில் இவ்வாறான காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதாகவும் தாங்கள் வாழ்வாதாரமாக செய்து வருகின்ற இத் தோட்ட செய்கையை அளிப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறே இரவு யானைக்ரகூட்டம் பல தென்னை மரங்களை அழித்து அவற்றை சேதப்படுத்தியும் சென்றுள்ளது .
காட்டு யானைகளினால்
தொடர்ச்சியாக இவ்வாறான நிலை ஏற்படுமாயின் இக்கிராமத்தில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் தான் தோளில் சுமந்து நீர் ஊற்றி வளர்க்கப்பட்ட தென்னைகள் எனவும் தற்போது அவை பலனை தந்து கொண்டிருந்த போது அவற்றை அழித்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு பரப்புக் கடந்தான் கிராமத்திற்கு ஒரு யானை வேளி அமைத்து தருமாறு மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

No comments:
Post a Comment