முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சுமூகமாக நிறைவு 61.32 வீதமான வாக்கு பதிவு
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு துணுக்காய் ,மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7:00 மணி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் சமூகமாக இடம் பெற்று 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி இடம்பெற்ற குறித்த தேர்தலில் 41 வட்டாரங்களிலும் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற இருக்கிறது
முல்லைத்தீவு மாவட்டத்தில் 87800 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 3807 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் இதன்படி இன்று நேரடியாக வாக்களிக்கவுள்ளோர் 83993 பேர் இதில் மாலை 04.00 மணி வரையான காலப்பகுதியில் 50070 வாக்குகள் பதிவாகியுள்ளது
இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் மாலை 04.00 மணிவரை 59.61 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளது
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 50070 பேர் நேரடியாக வாக்கினை பதிவு செய்ததோடு தபால் மூலமாக3769 பேர் வாக்களித்துள்ளனர் இதன்படி மாவட்டத்தில் 53839 வாக்குகள் பதிவாகியுள்ளதோடு இது 61.32 வீதமாக பதிவாகியுள்ளது

No comments:
Post a Comment