அண்மைய செய்திகள்

recent
-

மின்னல் தாக்குதலில் வயலில் வேலை செய்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

 மின்னல் தாக்குதலில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்!


07-05-2025 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல் வெளிபகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மீது மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். 


இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


43 வயதுடைய 8ம் வட்டாரம் மந்துவில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அருமைநாயகம் யசோதரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் கொண்டுவரப்பட்ட நிலையில் அங்கு புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி த. பிரதீபன் முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.






மின்னல் தாக்குதலில் வயலில் வேலை செய்த குடும்பஸ்தர் உயிரிழப்பு! Reviewed by Vijithan on May 08, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.