இஸ்ரேலில் தொழிலுக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தம்
இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இன்று (16) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர,
"வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பயணம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அடுத்த சில நாட்களில் நாங்கள் ஒரு முடிவை எடுக்க முடியும். குறிப்பாக இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள எங்கள் மக்களுக்கு தூதரகத்துடன் தொடர்பைப் பேணுமாறு நாங்கள் கூற விரும்புகிறோம். தேவையான தொலைபேசி இலக்கங்களை நாங்கள் வழங்கியுள்ளோம். ஏதேனும் சிக்கல் நிறைந்த சூழ்நிலை ஏற்பட்டால், எங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. எங்கள் குடிமக்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை." என்றார்.
இஸ்ரேலில் தொழிலுக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தம்
Reviewed by Vijithan
on
June 16, 2025
Rating:
Reviewed by Vijithan
on
June 16, 2025
Rating:


No comments:
Post a Comment