பசுவின் கயிற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன்
பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் ஒருவன் நேற்று (14) உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அனுராதபுரம் விஹாரபலுகம வித்யாராஜா கல்லூரியில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுவனே நேற்று முன்தினம் (13) மாலை இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தை சந்தித்துள்ளான்.
சிறுவன் வேறு சில நண்பர்களுடன் பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு பசுவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, குழப்பமடைந்த பசு அங்கிருந்து வீதியில் ஓடியுள்ளது.
அங்கு, துரதிர்ஷ்டவசமாக குறித்த சிறுவனும் பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி, கிட்டத்தட்ட 900 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, பலத்த காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.
இருப்பினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுவன் நேற்று மதியம் உயிரிழந்துள்ளான்.
பசுவின் கயிற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன்
Reviewed by Vijithan
on
June 15, 2025
Rating:
Reviewed by Vijithan
on
June 15, 2025
Rating:
.jpg)

No comments:
Post a Comment