30 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்கள் பதிவு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 30 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு ,சப்ரகமுவ மற்றும் ஒலுவில் பல்கலைக்கழகங்களில் அதிகளவான பகிடிவதைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடளிக்க, 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும்.
இவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் இரகசியமாக பரிசீலிக்கப்படும் என்பதுடன், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
June 20, 2025
Rating:


No comments:
Post a Comment