முல்லைத்தீவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவனின் உயிர்காக்க உதவுங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வசித்து வரும் பரமேஸ்வரன் வானுசன் குடும்பத்தில் பெற்றோருக்கு ஒரேயொரு மகன் இவர் சிறுவயதிலிருந்தே கற்றலில் மிகுந்த ஆர்வமடையவராக திகழ்ந்து வருகிறார்.
அந்த வகையில் ஆரம்பக்கல்வியை மு/பண்டாரவன்னியன் மகாவித்தியாலத்தில் கற்று சாதாரணதரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்று உயர்தர கல்வியை மு/ஒட்டுசுட்டான் மகாவித்தியாலத்தில் பொறியியல் தொழினுட்ப பிரிவில் தோற்றி மாவட்ட ரீதியில் முதல் நிலையைப்பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள நிலையில்,
உடல் நிலையில் ஏற்பட்ட தீடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலை சென்ற நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் நாள்ப்பட்ட சிறுநீரக செயலிழப்பு என உடனடியாக மாற்று அறுவைசிகிச்சை செய்யுமாறு வைத்திய அதிகாரிகளால் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விவசாய குடும்பமென்பதால் தந்தை நாளாந்த கூலிவேலையிலே வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருவதால் இச்சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகளை பொறுப்பேற்க முடியாதுள்ளது அதனால் குறித்த சிகிச்சைக்கான தங்களால் முடிந்த உதவிகளை தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
A.C [BOC]-9916949
Contact:
0740225902

No comments:
Post a Comment