நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா வியாழக்கிழமை (3) மாலை மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
நானாட்டான் பங்கிற்கு உட்பட்ட 08 துணை ஆலயங்களுக்கான கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டது.
முத்தரிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை தேவராஜா கொடுதோர் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் இடம் பெற்று எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப் படும்.
நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
Reviewed by Vijithan
on
July 04, 2025
Rating:

No comments:
Post a Comment