வந்தாறுமூலையில் குரங்குகள் அட்டகாசம்..6 பெண்கள் படுகாயம்
மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனைபகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் பெண்களை கடித்ததில் இதுவரை 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வந்தாறுமூலை பேக்வீதியில் நேற்று (21) வீட்டை விட்டு வெளியில் வந்த வயதான பெண் ஒருவரை குரங்கு கடித்ததையடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார்.
இவரின் காலில் பாரிய தசைபகுதி இல்லாமல் போயுள்ள நிலையில், மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் இதுவரை 06 பேர் குரங்கு கடிக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் பெண்கள் என்பதுடன், கடந்த சில வாரங்களாக குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் வீட்டின் கூரைகளை உடைத்து சேதமாக்கி வருவதுடன், மாமாரம் பலாமரம் போன்ற பயன்தரும் மரங்களின் பழங்கள் காய்களை பிடுங்கி அழித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறே அந்த பகுதியில் பயிரிடப்பட்ட மரக்கறிகளை பிடுங்கி அழித்து அட்டகாசம் செய்து வருவதுடன், வீட்டில் இருந்து வெளியே வரும் வயதான பெண்களை குறிவைத்து அவர்கள் மீது தாக்கி அவர்களை கடித்ததில் அவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதனால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள் முடங்கி அச்சத்தில் வாழ்ந்து வருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
July 23, 2025
Rating:


No comments:
Post a Comment