கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு செய்யப்பட்ட ரமேஷ் என்பவர் நேற்றிரவு (21) கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து டி-56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் அவர் இந்தத் துப்பாக்கியைத் தம்சவம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து, தங்களிடமிருந்து தகவல் வரும்வரை ஹோட்டல் அறையில் தங்கியிருக்குமாறு கூறிச் சென்றுள்ளனர்.
இதற்கிடையில், பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி
Reviewed by Vijithan
on
July 22, 2025
Rating:

No comments:
Post a Comment