அண்மைய செய்திகள்

recent
-

ஆசிய கோப்பைக்கான 18 வயதுக்குட்பட்ட தேசிய ஹொக்கி அணியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவன்

 சீனாவில் நடைபெற உள்ள 2025 ஆசிய கோப்பைக்கான 18 வயதுக்குட்பட்ட தேசிய ஹொக்கி அணியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த மாஸ். எஸ். ஜோன் நதேனியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

சிவகுமார் ஜோண் நத்தேனியா அவர்கள் 2015ம் ஆண்டு இவ் தோட்டம் கீழ்ப்பிரிவு, போகந்தலாவ ஹட்டன் எனும் இடத்தில் இருந்து கல்விக்காக யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் அன்றைய அதிபர் Rev. Fr. ஞானப்பொன்ராஜா அவர்கள் காலத்தில் கல்லூரியில் இணைக்கப்பட்டார். (2015ம் ஆண்டு)


இக் கல்லூரியின் விடுதியில் இருந்தே இன்று வரை கல்வி கற்று வருகின்றனர். இவர் தனது சிறுபாராயத்தில் இருந்து பெற்றோருடன் இருந்த காலத்தை விட கல்லூரியில் இருந்த நாட்களே அதிகம், அன்று தொடக்கம் இன்று வரை பாடசாலையில் கல்வியுடன் இணைபாடவிதான செயற்பாடுகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றார்.


அவர் தனது 12வது வயதில் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் 12 வயது உதைபந்தாட்ட அணிக்கு சிறப்பாக தலைமைதாங்கி மாகாணத்தில் 1ம் இடத்தையும் தேசியமட்டத்தில் 3ம் இடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தார். அத்தோடு பாசிலோனியா செல்வதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களில் இவர் மிக சிறந்த 8 வீரர்களுக்குள் இடம் பிடித்தார். இந்த 12 வயது பிரிவுக்கு பயிற்றுவிப்பாளராக C.A.அரவிந்தன் திகழ்ந்தார்.


மேலும் இவர் படிப்படியாக பலதுறைகளில் காலடி வைத்தார். அந்த வகையில் இவர் ஹொக்கியையும் அதே பயிற்றுவிப்பாளரிடம் தனது 15 வயதில் இருந்து கற்கத் தொடங்கினார். யாழ்ப்பாணத்தில் மாகாணமட்டத்தில் நடைபெறும் (வருடாவருடம்) ஹொக்கி போட்டியில் சிறுவயதிலேயே Under 19 அணியில் விளையாடத் தகுதி பெற்றார். அதற்கு காரணம் அவரது தொடர் பயிற்சியும் விடா முயற்சியும் ஒழுக்கமும் ஆகும்.


இதன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் இடம் பெற்ற ஹொக்கி போட்டியில் 2023ம் ஆண்டு மாகாண ஹொக்கி போட்டியில் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து 2024ம் ஆண்டு கல்லூரியின் Under 20 ஹொக்கி அணிக்கு தலைமை தாங்கி மாகாண champion ஆக எமது கல்லூரி இடம் பெறக் காரணமானதுடன் மாகாண ஹொக்கி போட்டியில் 2024ம் ஆண்டின் சிறந்த வீரராகவும் தெரிவு செய்யப்பட்டார்.


அத்துடன் கல்லூரியின் வர்ண விருதினை (Hockey) 2023 ஆண்டு பெற்றுக்கொண்டார். மேலும் இவர் கல்லூரியின் மெய்வல்லுனர் அணி, Cricket அணி, Volley ball அணி, Badminton அணிகளும் அங்கத்தவராக இருந்து செயற்படும் வீரராவர்.


மேலும் சென். ஜோன்ஸ் கல்லூரி வரலாற்றில் 1907 ஏ.ஜே.ஆர்.வேதாபரணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களால் ஹொக்கி ஆண்டு விளையாட்டு


இன்று சென்.ஜோண்ஸ் கல்லூரி 202வது வருடத்தில் கால்பதித்தவருக்கும் இவ் வருடத்தில் (2025) Under 18 வயது பிரிவில் தேசிய அணியில் இடம் பெற்று இருக்கின்றமை எமது கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக அமைகின்றது.


இறுதியாக தற்போதைய எமது கல்லூரி அதிபர்.V.S.B துசிதரன் காலத்தில் தேசிய ஹொக்கி அணியில் இம் மாணவன் இடம்பெற்றமை கல்லூரிக்கும் வடமாகாணத்திற்கும் பெருமையாகும். மேலும் இவரது பயிற்சியாளர்களாகத் திகழ்ந்து இவரது உருவாக்கத்திற்கு உதவியவர்களாக தற்போது விளையாட்டு பொறுப்பாசிரியராக இருக்கும் C.A அரவிந்தன், மற்றும் T.விமல்ராஜ் அவர்களைக் குறிப்பிடலாம்.



இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை மற்றும் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி சமூகத்திற்கு ஒரு பெருமையான தருணம்.


அவர் தனது விளையாட்டுப் பயணத்தை சிறப்பாக்க அவருக்கு நல்வாழ்த்துக்கள்!











ஆசிய கோப்பைக்கான 18 வயதுக்குட்பட்ட தேசிய ஹொக்கி அணியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவன் Reviewed by Vijithan on July 01, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.