தாதியர்களின் ஓய்வு வயது 60 ஆக குறைப்பு – தாதியர் சங்கம் விடுக்கும் எச்சரிக்கை
தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால், எதிர்காலத்தில் கடுமையான பிரச்சினைகள் உருவாகலாம் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போது தாதியர் துறையில் நிலவும் மனிதவளக் குறைபாடு, ஓய்வு வயதை குறைப்பதால் மேலும் மோசமாகும் என சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக உயர்த்திய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, சுகாதார அமைச்சு உயர் நீதிமன்றத்தில் மேல் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றும் பணியை இடைநிறுத்த மார்ச் 6 ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 4 ஆம் திகதி, 60 வயதை நிறைவு செய்த அனைத்து தாதியர் அதிகாரிகளும் கட்டாய ஓய்வு பெற வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:
Post a Comment