ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட 2250 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல்:- ஒருவர் கைது: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை மன்னார் நிருபர்
ராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட பீடி இலை பண்டல்களை மடக்கிப் பிடித்த கியூ பிரிவு போலீசார். இது சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் வெள்ளரி ஓடை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் இருந்து சமையல் மஞ்சள், சுக்கு, கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலை பண்டல்கள் உள்ளிட்டவைகள் அதிக அளவு இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (30) அதிகாலை ராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரை யிலிருந்து இலங்கைக்கு பீடி இலை பண்டல்கள் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்த இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குநு கியூ பிரிவு போலீசார் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கண்டெய்னர் லாரி ஒன்றில் இருந்து இலங்கைக்கு பீடி இலை பண்டல்களை படகில் ஏற்றி கொண்டிருந்தபோது அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்ற போது கடலில் படகில் இருந்த இருவர் 10 மூட்டை பீடி இலை பண்டல்களுடன் கடல் வழியாக தப்பினர்.
மேலும் பீடி இலை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வெள்ளரி ஓடை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை பிடித்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் கடல் வழியாக தப்பிச் சென்று மர்ம நபர்கள் இருவர் குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
July 30, 2025
Rating:

.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment