வெளிநாட்டில் இலங்கையரும் மனைவியும் அதிரடியாக கைது!
பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் மந்தினு பத்மசிறி என்ற கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான கமாண்டோ சலிந்த ஆகியோர் மலேசிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று (09) இடம்பெற்ற இக்கைது நடவடிக்கையில் இவர்களுடன், கெஹெல்பத்தர பத்மேயின் கள்ளக்காதலியான பிரபல பாதாள உலகக்குழுத் தலைவரான ஹரக் கட்டாவின் மனைவி மற்றும் குழந்தையும் மலேசிய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலை
கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் கனேமுல்ல சஞ்ஜீவ என்ற பாதாள உலகக்குழு உறுப்பினரின் படுகொலையை திட்டமிட்டவர் என சந்தேகிக்கப்படுகிறார்.
சந்தேக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி மலேசியாவிலிருந்து தாய்லாந்திற்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனேமுல்ல சஞ்ஜீவ படுகொலைக்குப் பிறகு, கெஹெல்பத்தர பத்மே துபாயிலிருந்து மலேசியாவிற்கு தப்பிச் சென்றதாகவும், இந்தக் கைது தொடர்பாக இலங்கை புலனாய்வுப் பிரிவு முன்கூட்டியே தகவல் அறிந்திருந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேவேளை கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலையில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி இந்தக் கைது நடவடிக்கையில் உள்ளடங்கியிருக்கிறாரா என்பது இதுவரை தெளிவாகவில்லை.
இந்தக் கைதுகள் தொடர்பாக இலங்கை பொலிஸார், சர்வதேச பொலிஸாரிடம் (இன்டர்போல்) உத்தியோகபூர்வ தகவல்களை விசாரித்து வருகின்றனர்.
மேலும் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Reviewed by Vijithan
on
July 10, 2025
Rating:


No comments:
Post a Comment