அண்மைய செய்திகள்

recent
-

O/L பரீட்சை பெறுபேறுகள் - 237,026 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்தார். 


இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும். 

இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 4.15  சதவீதமாகும்,

 

மாகாண வாரியாக மாணவர் சித்தி சதவீதம் பின்வருமாறு,

 

மேல் 74.47%
மத்திய 73.91%
தெற்கு 75.64%
வடக்கு 69.86%
கிழக்கு 74.26%
வடமேல் 71.47%
வட மத்திய 70.24%
ஊவா 73.14
சப்ரகமுவ 73.47%

 

பாட வாரியாக சித்தி சதவீதம் பின்வருமாறு,

 

பௌத்தம் -  83.21%

சைவநெறி  - 82.96%

கத்தோலிக்கம் 90.22%

கிறிஸ்தவம் 91.49%

இஸ்லாம் 85.45%

ஆங்கிலம் 73.82%

சிங்கள மொழி மற்றும் இலக்கியம் 87.73%

தமிழ் மொழி மற்றும் இலக்கியம் 87.03%

வரலாறு 82.17%

அறிவியல் 71.06%

கணிதம் 69.07%

 

அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாத மாணவர்களின் சதவீதம் 2.34%




O/L பரீட்சை பெறுபேறுகள் - 237,026 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி Reviewed by Vijithan on July 11, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.