அண்மைய செய்திகள்

recent
-

82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

 நாடு முழுவதும் 82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்த மருந்தகங்கள் தேவையான தரநிலைகளைப் பேணாததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

 

இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஜூலை 18 வரை, தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு 2039 உரிமப் புதுப்பிப்பு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. 

 

இவற்றில் 1,820 மருந்தகங்களுக்கு புதிய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், 219 மருந்தகங்களின் உரிமங்கள் புதுப்பிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

 

இவற்றில் 137 மருந்தகங்களில் முழுநேர மருந்தாளுநர்கள் நியமிக்கப்படாததால், அவர்கள் நியமிக்கப்படும் வரை உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு Reviewed by Vijithan on July 25, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.