மன்னாரில் மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு.
மன்னாரில் வறுமைக் கோட்டிற்கு உள்ளான பெண் தலைமைத் துவத்தை கொண்ட கொண்ட குடும்பத்திற்கு மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடு இன்று வெள்ளிக்கிழமை (18) வைபவ ரீதியாக திறக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
மக்கள் நல்வாழ்வு மையத்தின் ஒழுங்கு அமைப்பில் புலம்பெயர் நாட்டில் வசித்து வரும் ஒரு குடும்பத்தின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 120 வது வீடு அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
சுமார் 11 லட்சம் ரூபாய் நிதி பங்களிப்பில் குறித்த வீடு மன்னார் பிரதேச செயலக பிரிவின் துள்ளு குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை நூறு விட்டு திட்டம் பகுதியில் ஒன்பது நபர்களைக் கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பத்துக்கு வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் உதவி பங்கு தந்தை,மற்றும் பேசாலை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி,நிதி அனுசரணையாளர் அவுஸ்திரேலியா ஆகியோர் இணைந்து குறித்த வீட்வை வைபவ ரீதியாக திறந்து குறித்த பயனாளிகளிடம் கையளித்தனர்.இதன் போது மக்கள் நல்வாழ்வு மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் மன்னார் இணைப்பாளர் குயின்ரஸ் ஷர்மிளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓலைத்தொடுவாய் பகுதியிலும் மன்னார் மாவட்டத்தில் 119வது குறித்த வீட்டு திட்டம் மன்னார் பிரதேச சபையின் செயலாளர் செல்வம் லுமினா பேரேரா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது .

No comments:
Post a Comment