மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் 'நகர கடற்கரை பூங்கா' அமைக்கும் பணி ஆரம்பம்.
மன்னார் நகர நுழைவாயிலில் பிரதான பாலத்திற்கு அருகாமையில் கடந்த வருடம் 'நகர கடற்கரை பூங்கா' அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (15) மாலை முதற்கட்ட பணிகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உடற்பயிற்சி மேற்கொள்ளவும்,பொழுது போக்கிற்காகவும் இயற்கையான முறையில் அமைக்க மேற்கொள்ளப்பட்டு வந்த கடற்கரை பூங்காவின் முதற்கட்ட பணிகள் இன்றைய தினம் (15) முன்னெடுக்கப்பட்டு ஒப்பந்ததாரரிடம் வைபவ ரீதியாக குறித்த வேளைத்திட்டம் கையளிக்கப்பட்டது.
குறித்த ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்,மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதப்,மன்னார் நகர சபையின் செயலாளர்,ராணுவ அதிகாரிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் நகரசபைக்கு குறித்த இடம் வழங்கப்பட்ட நிலையில் குறித்த வேளைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாண சுற்றுலா பணியகத்தினால் குறித்த கடற்கரை பூங்கா அமைக்க 16 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முதல் கட்டமாக 6 மில்லியன் ரூபாய் நிதிக்கான வேளைத்திட்டங்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (15) முதல் கட்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மிகுதி 10 மில்லியன் ரூபாவுக்கான வேளைத்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் 09 மாத காலங்களுக்குள் குறித்த வேளைத் திட்டத்தை நிறைவடைய நடவடிக்கைகளை மேற்கொள்ள பட்டுள்ளது.

No comments:
Post a Comment