மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கடற்கரையோரங்களில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு.
' சுத்தமான கடற்கரை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலமாகும் , எனும் தொனிப்பொருளில் மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவு ஏற்பாடு செய்த கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29) மன்னாரில் உள்ள பல்வேறு கடற்கரை பகுதியில் இடம்பெற்றது.
மன்னார் வங்காலை,கீரி,சௌத்பார்,தலைமன்னார் ,முத்தரிப்புத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரையோரங்கள் தூய்மையாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்துடன் சர்வமத தலைவர்கள்,கடற்படையினர்,கிராம மக்கள்,திணைக்கள தலைவர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள்,உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற பணியாளர்களும் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.
Reviewed by Vijithan
on
July 29, 2025
Rating:

.jpeg)
.jpeg)





No comments:
Post a Comment