அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம்பெற்ற மாந்தை மேற்கு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

 மாந்தை மேற்கு பிரதேச  பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (15.07.2025)  மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு.டெ.க.அரவிந்தறாஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இவ் ஆண்டுக்கான பண்பாட்டுப் பெரு விழாவின் அரங்கம் மறைந்த எமது மண்ணின் கலைஞர் கலாபூசணம் ச.ஞானசீலன்  அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது.

காலை 09.30 மணியளவில் மன்/அடம்பன் தேசிய பாடசாலையின் முன்றலில் இருந்து மாந்தை மேற்கின் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையிலான பாரம்பரிய ஊர்திகள், இன்னிய இசை, நிறைகுட மகளிர் மற்றும் பாரம்பரிய நடன உர்வலங்களின் அணிவரிசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு, தமிழ்தாய் வாழ்த்துடன் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின, 

 பிரதேச கலைஞர்களின் பல கலைநிகழ்வுகள் மேடையேறியதோடு, கலாசார பிரிவினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் முதல் இடங்களை பெற்ற கலை நகழ்வுகளும் மேடையேறின

இவ் விழாவின்போது எமது பிரதேசத்தின் பல கலைஞர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சம்

 இக் கலாசார விழாவின் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் திரு.க.கனகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார், சிறப்பு விருந்தினராக மடு வலயக்கல்வி பணிப்பாளர் திருவாட்டி A C வொலன்ரைன் அவர்களும், கௌரவ விருந்தினராக மன்னார் மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திரு.ர.நித்தியானந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு, பிரதேச கலைஞர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பிற திணைக்கள அலுவலர்கள், பொதுமக்கள்  மற்றும் பிரதேச செயலக அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

























சிறப்பாக இடம்பெற்ற மாந்தை மேற்கு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா Reviewed by Vijithan on July 15, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.