நாங்கள் மக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒரு அணியின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளோம் - மன்னார் நகர சபை தவிசாளர் டானியல் வசந்தன்
அரசியலில் எதிர் நிலைப்பாட்டை கொண்டுள்ள நாங்கள் கொள்கை ரீதியாக எதிர்ப்பாக உள்ள நாங்கள் மக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒரு அணியின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் நகர சபை தவிசாளர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.
-மன்னார் நகர சபையின் செயலாளர்,உத்தியோகத்தர் கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் நகர சபையின் 3 வது சபைக்கான உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (4) காலை 10 மணியளவில் மன்னார் நகர சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மக்களுக்கு சேவையை வழங்குவதற்காக நாங்கள் அரசியலில் ஈடுபடுகின்றோம்.மக்களுக்கான சேவைகள் அனைவருக்கும் சம அளவில் சென்றடைய வேண்டும்.உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் கடமையாற்றி வருகின்றோம்.
அந்த கடமையை நாங்கள் அனைவரும் உணர்ந்தவர்களாக எமது செயல்பாடுகள் அமைய வேண்டும்.சிலர் கடமைகளில் இருந்து விலகி செல்கிறார்கள்.நாங்கள் அரசியலுக்கு வந்த நோக்கம் மக்களுக்கான அதிகாரங்களையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.மக்களுக்கான சேவைகள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம்.
-மன்னார் நகர சபை யை பார்ப்போமானால் மூன்று கட்சிகள் இணைந்து இச்சபை யை உருவாக்கி உள்ளது.எதிரும் புதிருமாக அரசியலில் உள்ள கட்சிகள் இணைந்து இச்சபை யை உருவாக்கி உள்ளது.
இக்கட்சிகள் ஒன்றாக இணைந்து இச் சபையை அமைத்துள்ளோம்.அரசியலில் எதிர் நிலைப்பாட்டை கொண்டுள்ள நாங்கள் கொள்கை ரீதியாக எதிர்ப்பாக உள்ள நாங்கள் மக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒரு அணியின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளோம்.பலர் பல்வேறு வகையில் கதைப்பார்கள்.வெளியில் பலர் என் மீது பல்வேறு விமர்சனங்களை வைப்பார்கள்.அந்த நேரத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை அவர்களுக்கு நாங்கள் காட்டியாக வேண்டும்.
கவலைக்குரிய விடயம் என்ன என்றால் இன்றைய வரவேற்பு நிகழ்வில் பல உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.நகர சபை அதிகாரிகள்,ஊழியர்கள் ஒன்றிணைந்து உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்தனர்.அவர்களின் வரவேற்பை ஏற்று அவர்களுக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும்.அப்படி என்றால் நாங்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.இந்த விடையம் மக்களினால் விமர்ச்சிக்க படக்கூடிய ஒரு விடையமாக காணப்படுகிறது.காரணம் உறுப்பினர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்பதை காட்டுகிறது.
நாங்கள் மனதில் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.நாங்கள் நகர சபைக்கு உறுப்பினர்களாக வந்தது மக்களுக்கு சேவையாற்றுவதற்கு.இக் காலப்பகுதிக்குள் எமது தனிப்பட்ட அரசியலை கொண்டு செல்வதற்காக இல்லை.மக்களுக்கு சேவை செய்யவும்,நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காகவும் இங்கு வந்துள்ளோம்.மன்னார் நகர சபை அனைத்து மக்களுக்குமான சேவையை சமமாக வழங்க வேண்டும்.
மூன்று கட்சிகள் இணைந்து இச் சபையை நடத்திச் செல்லும் இவ் வேளையில் மக்கள் எங்களை உற்று நோக்கி அவதானித்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாங்கள் எந்த நேரத்திலும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இல்லாத கால கட்டத்தில் நகர சபையின் செயலாளர் தலைமையில் உறுப்பினர்கள் பணியாளர்கள் மிகவும் திறம்பட தமது சேவையை முன் னெடுத்துள்ளார்கள்.அவர்கள் சிறப்பாக செய்துள்ளார்கள்.
நாங்கள் இல்லாத காலத்தில் ஈடு அவர்கள் தமது கடமையை செய்வார்கள்.எமது செயற்பாடுகளினால் அவர்களின் அவ்வாறான நல்ல வேலைத்திட்டங்களை நாங்கள் குழப்பி விடக்கூடாது.எனவே மக்களுக்கான எமது சேவையை சரியான முறையில் வழங்கி ,எமது நகர அபிவிருத்தி யை நாங்கள் திறம்பட முன்னெடுக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் செயலாளர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மத தலைவர்கள், உள்ளுராட்சி ஆணையாளர்,பிரதேச சபைகளின் செயலாளர்கள்,மன்னார்,நானாட்டான்,மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தலைவர்கள்,மன்னார் நகர சபையின் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை மன்னார் நகரசபைக்கு 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்ற போது குறித்த உறுப்பினர்களில் 07 உறுப்பினர்கள் மத்திரமே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment