அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா ஒமந்தையில் அடாத்தாக காணி பிடிக்கும் பொலிஸார் – நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பி

 வவுனியா – ஓமந்தைப் பொலிஸார் பொலிஸ் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், பொலிஸ் அமைச்சின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு சென்றுள்ளார்.


பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த காணியை பொலிஸார் கையகப்படுத்த முடியாது எனவும் அதற்குள் செல்லக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.


அத் தீர்மானத்தையும் மீறி பொலிஸார் மீண்டும் காணியினை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த காணியை பொலிஸார் கையகப்படுத்த முடியாது எனவும் அதற்குள் செல்லக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.


இதனையடுத்து குறித்த காணிக்குள் ஓமந்தைப் பொலிஸார் நுழைவதற்கு தடை விதித்து வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபனால் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




வவுனியா ஒமந்தையில் அடாத்தாக காணி பிடிக்கும் பொலிஸார் – நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பி Reviewed by Vijithan on July 09, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.