அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி வாகனத்துடன் பறிமுதல்: மரைன் போலீசார் நடவடிக்கை

 மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) சரக்கு வாகனத்துடன் மரைன் போலீசார் நேற்று சனிக்கிழமை இரவு  பறிமுதல் செய்து மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் மண்டபம் மரைன் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்ட போது இலங்கைக்கு கடத்துவதற்காக   வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 35 மூட்டைகளில் சுமார்  ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) பறிமுதல் செய்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.


மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சுக்கின் மதிப்பு பல  லட்சம் இருக்கலாம் எனவும் கைப்பற்றப்பட்ட சரக்கு வாகனத்தின் பதிவு எண் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் தீவிரமாக தேடி வருவதாக மரைன் போலீசார்  தெரிவித்துள்ளனர்.


மரைன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுக்கு மற்றும் சரக்கு வாகனம் இரண்டையும் மண்டபத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர் .














இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி வாகனத்துடன் பறிமுதல்: மரைன் போலீசார் நடவடிக்கை Reviewed by Vijithan on August 11, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.