பொலிஸாரின் அதிரடி சோதனையில் 800 பேர் கைது
நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 838 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 20 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 675 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் மற்றும் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த 6,129 பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, 25,755 நபர்கள், 10,602 வாகனங்கள் மற்றும் 7,998 மோட்டார் சைக்கிள்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கைகளின்போது, 4 சட்டவிரோத துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டிய 86 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கவனயீனமாக வாகனம் செலுத்திய 3,828 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Reviewed by Vijithan
on
August 07, 2025
Rating:


No comments:
Post a Comment