தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்ய அனுமதி
1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார மாற்றங்கள் காரணமாக சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் துஸ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் சிக்கலானதாக மாறியுள்ளன.
எனவே, சிறுவர்களுக்கு எதிரான அனைத்துவித துஸ்பிரயோகங்களை தடுத்தல் மற்றும் அவற்றுக்கு பதில்வினையாற்றுவதற்கு தற்போதுள்ள சட்டங்களை சமகால தேவைகளுக்கு ஏற்புடைய வகையில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தின் கருமங்களை மிகவும் பரந்த அளவில், அர்த்தமுள்ளதாகவும், வினைத்திறனாகவும் திருத்தங்களை உள்ளடக்கி, மேற்குறித்த நிறைவேற்றுவதற்காக இனங்காணப்பட்டுள்ள சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட வரைபை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்ய அனுமதி
Reviewed by Vijithan
on
August 05, 2025
Rating:

No comments:
Post a Comment