அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அகதிகளுக்கு கடவுச்சீட்டு – இந்தியா நீதிமன்றின் உத்தரவு

 இந்தியாவில் பிறந்த இலங்கை தமிழர்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவது குறித்து மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று தமிழக நீதிமன்றம் ஒன்று, இந்திய மத்திய அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.


இதன்படி, இந்தியாவில் பிறந்தாலும், அகதிகளாக இருக்கும் நிலையில், நாடற்றவர் என்ற வகுதிக்குள் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்யுமாறு சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை கிளை, மத்திய அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.


இந்திய கடவுச்சீட்டுக்கான தமது விண்ணப்பத்தை பரிசீலித்து இந்திய கடவுச்சீட்டை வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஹரினா என்பவர் 2024 இல், தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்தபோதே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மனுதாரர் 2002இல் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பிறந்தார்.


அவரது பெற்றோர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் இந்தநிலையில் மனுதாரர் இந்தியாவில் தனது பாடசாலை மற்றும் பட்டப்படிப்பை முடித்த பின்னர், உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்புவதாகக் கூறியுள்ளார்.


எனினும் இந்திய கடவுச்சீட்டுக்கான தமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, 2022 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை அணுகியதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.


2023 ஆம் ஆண்டு, இந்திய கடவுச்சீட்டுக்கான தனது விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அவர் 2023 ஆம் ஆண்டு புதிய பயண ஆவணத்திற்கு விண்ணப்பித்தார்.


இருப்பினும், அவரது கோரிக்கையை ஏற்று, வெளியுறவு அமைச்சகம் கடவுச்சீட்டையோ அல்லது பயண ஆவணத்தையோ வழங்கவில்லை. மாறாக, மனுதாரர் இந்திய குடிமகன் இல்லை என்ற காரணத்தினால் அவர் கடவுச்சீட்;டை பெற விண்ணப்பிக்க முடியாது என்று வெளியுறவு அமைச்சு நீதிமன்றுக்கு பதிலளித்திருந்தது அத்துடன் அவர் சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகத்தை அணுகுவது நல்லது என்றும் அமைச்சு தெரிவித்திருந்தது.


இந்தநிலையில் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி, தமது கட்சிக்காரர் இந்தியாவில் பிறந்தவர் என்றும், இலங்கைக் குடிமகனாகவோ அல்லது இலங்கையின் குடிமகனாகவோ பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.


மனுதாரர் நாடற்றவராகவே அறிவிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். மனுதாரர் இந்தியாவில் பிறந்தவர் என்பதையும், கரூர் மாவட்டம், தான்தோணி டவுன் பஞ்சாயத்தின் நிர்வாக அதிகாரியால் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதையும் அவர் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.




அவருக்கு இந்தியாவில் ஆதார் அட்டையும் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மனுதாரர் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை மேல் நீதிமன்றில் மதுரைக்கிளை இரத்து செய்தது.


அத்துடன், மனுதாரரின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யுமாறு நீதிமன்றம் வெளியுறவு அமைச்சுக்கு உத்தரவிட்டு;ள்ளது. அத்துடன் வழக்கு தொடர்பான முழு நடவடிக்கையையும் மூன்று மாதங்களுக்குள் நிறைவுசெய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.




இலங்கை அகதிகளுக்கு கடவுச்சீட்டு – இந்தியா நீதிமன்றின் உத்தரவு Reviewed by Vijithan on August 02, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.