அண்மைய செய்திகள்

recent
-

கைதியை கொலை செய்ய சிறைக்குள் சயனைடு?

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சிறை அதிகாரிகள் ஒரு சயனைடு (cyanide) குப்பியைக் கண்டுபிடித்துள்ளனர். 

போதைப்பொருள் கடத்தல்காரரான "குடு சலிந்து"வின் உதவியாளரான "தரிந்து மதுசங்க" என்பவரிடம் இருந்து குறித்த சயனைடு குப்பி கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

"கமாண்டோ கவிஷ்க குமாரவைக் கொலை செய்வதற்காக இந்த சயனைடு குப்பி சிறைச்சாலைக்குள் கொண்டு வரப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சிறைச்சாலைக்குள் கொண்டுவரப்பட்ட சயனைடை, பரிசோதிப்பதற்காக அதனை கொண்டு வந்த குழு, ஒரு பல்லியைப் பிடித்து அதற்கு ஊசி மூலம் செலுத்தியதாகவும், பல்லி சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தெரியவந்துள்ளது.




கைதியை கொலை செய்ய சிறைக்குள் சயனைடு? Reviewed by Vijithan on August 19, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.