அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் யூசி மாஸ் (UCMAS) மாணவர்கள் கொழும்பில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில் சாதனை

 கொழும்பில் கடந்த சனிக்கிழமை (23)  நடைபெற்ற  யூசி மாஸ்   (UCMAS) தேசிய மட்டப் போட்டியில் மன்னார் UCMAS பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த 50 மாணவர்கள் பங்கேற்றனர்.  


 பங்கு பற்றிய குறித்த மாணவர்களில் ஒரு Grand Champion, ஒரு Champion,  ஒரு 1st Runner up உட்பட 33 மாணவர்கள் வெற்றிக் கிண்ணங்களை ப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்கள். 


 இவர்கள் அனைவரும் மன்னார் UCMAS பயிற்சி நிலையத்தின் நிர்வாகி கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியர் திருமதி யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் பங்கேற்றனர்.


அத்துடன் இரண்டு மாணவர்கள் யூசி மாஸ் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த நிலையில்   அவர்கள் பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் யூசி மாஸ் (UCMAS) மாணவர்கள் கொழும்பில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில் சாதனை Reviewed by Vijithan on August 25, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.