வரலாற்றில் முதல் தடவையாக மன்/கற்கிடந்தகுளம் றோ.க.த .கலவன் பாடசாலையினரின் சாதனைகள்.
வரலாற்றில் முதல் தடவையாக
மன்/கற்கிடந்தகுளம் றோ.க.த .கலவன் பாடசாலையினரின் சாதனைகள்.
நடைபெற்று முடிந்த வடமாகாண விளையாட்டு விழா - 2025 இல் பெண்கள் பிரிவில் 86 புள்ளிகளை பெற்று வடமாகாணத்தில் 3ம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன்...
மன்னார் வலயபாடசாலைகளில் மொத்த புள்ளிகளில் 5ம் இடத்தினையும் பெற்றுகொண்டனர்.
மேலும் 14 வயது பெண்கள் பிரிவில் அதிகூடிய புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தினை பெற்றுகொண்டார்கள்.
( 24 புள்ளிகள்)
12 வயது பெண்கள் பிரிவில் 26 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினையும்
16 வயது பெண்கள் பிரிவில் 28 புள்ளிகளை பெற்று 3ம் இடத்தினையும் பெற்றுகொண்டார்கள்.....
14 வயது பிரிவில்
A.மௌசிக்கா 80 M சட்டவேலி நிகழ்வில் கலந்து கொண்டு 15.00 செக்கன்களில் ஓடி முடித்து 1ம் இடத்தையும், 60M ஓட்ட நிகழ்வில் கலந்து கொண்டு
8.9 செக்கனில் ஓடிமுடித்து 4ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
18 வயது பிரிவில்
J.சுபானு கோமஸ் Triple jump நிகழ்வில் கலந்து கொண்டு 9.87 M தூரம் பாய்ந்து 2ம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
12 வயது பிரிவில் R.றஸ்சிதா றாகவி 60 M நிகழ்வில் கலந்து கொண்டு 9.00 செக்கன்களில் ஓடி முடித்து 1ம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன் வர்ண
சான்றிதழையும் பெற்றுகொண்டார்,மேலும் 100M ஓட்ட நிகழ்வில் கலந்து கொண்டு 15.01 செக்கனில் ஓடிமுடித்து 2ம் இடத்தினையும்,நீளம் பாய்தல் நிகழ்வில் கலந்து கொண்டு 4.13 M தூரம் பாய்ந்து 2ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
16 வயது பெண்கள் பிரிவில்
T.M.டென்சிகா 400 M ஓட்ட நிகழ்வில் கலந்து கொண்டு 1.05.0 செக்கன்களில் ஓடி முடித்து 3ம் இடத்தையும்,300M சட்டவேலி நிகழ்வில் கலந்து கொண்டு 50.1 செக்கனில் ஓடிமுடித்து 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
16 வயது பிரிவில் S.கிரகோறியா 400 M போட்டியில் கலந்து கொண்டு 1.04.34 செக்கன்களில் ஓடி முடித்து 2ம் இடத்தையும்,நீளம் பாய்தல் நிகழ்வில் கலந்து கொண்டு 4.91 M தூரம் பாய்ந்து 2ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
14 வயது பிரிவில்
S.இமல்டா மேரி,
A.மௌசிகா,J.நியூசியா,
E.மெக்கன்சி ஆகியோர் 4*100 M அஞ்சலோட்ட நிகழ்வில் கலந்து கொண்டு 58.9 செக்கன்களில்
ஓடி முடித்து 1ம் இடத்தை பெற்றுக்கொண்டார்கள்.
இவ் வெற்றிகளைப் பெறுவதற்கு மாணவர்களை நெறிப்படுத்தி மாணவர்களுடன் பக்கபலமாக இருந்த பயிற்றுவிப்பாளர் ஸ்.சி.டிலோசன்.சோசை
அவர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர் அஜந்தா கலிஸ்ரன்
மற்றும் பாடசாலை அதிபர் அல்வினஸ் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:
Post a Comment