சிந்துஜா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதி
மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் சிந்துயாவின் மரணத்தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றையதினம் செவ்வாய்கிழமை மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபர்களை பிணையில் செல்வதற்கு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்
அண்மையில் சிந்துஜாவின் வழக்கு விசாரணையில் சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிட்ட தாதிய உத்தியோகஸ்தர் இருவரும் இரண்டு குடும்ப நல உத்தியோகஸ்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர்களினால் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தினால் இம்மாதம் 12 திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்
இந்த நிலையில் குறித்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்குடன் சம்மந்தப்பட்ட வைத்தியர் ஆஜராகத நிலையில் குறித்த வைத்தியரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்
அதே நேரம் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நபருக்கு தலா பத்து இலட்சம் ரூபா சரீரபிணையில் விடுவிக்கப்பட்டதுடன் 26 திகதி மீண்டும் குறித்த வழக்கு திகதியிடப்பட்டுள்ளது
குறித்த வழக்கில் சிந்துஜாவின் சார்பில் சட்டத்தரணி டெனிஸ்வரன் சமர்பணங்களை மேற்கொண்டதுடன் இறந்த சிந்துஜாவின் தாயும் அவருடைய மகனும் நீதி மன்றத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Vijithan
on
August 12, 2025
Rating:

.jpeg)




No comments:
Post a Comment