அண்மைய செய்திகள்

recent
-

தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்.-ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ரெலோ ஆதரவு-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

 இலங்கை தமிழரசு கட்சி அனைத்து தமிழ் தேசிய  அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி ராணுவ  பிரசன்னத்திற்கு  எதிரான போராட்டத் திற்கான  முடிவை எடுத்திருக்க வேண்டும்.மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்.எனினும் முப்படை களுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு   தமிழீழ விடுதலை இயக்கம் 'ரெலோ' ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம்.என ரெலோ தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


-இன்று (17) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,,


தமிழினத்தின் மீது தொடர்ச்சியாக சிங்கள பேரினவாத அரசுகளின் முப்படைகளாலும் அரங்கேற்றப் பட்டு வரும் அடக்குமுறை, ஒடுக்குமுறை, இன அழிப்பு படுகொலைகளை வெறுமனே நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.


முப்படையினரின் இனவாத செயற்பாடுகள் நடைபெற வடக்கு கிழக்கிலே காணப்படும் அதிகூடிய தேவை யற்ற இராணுவ முகாம்களும் முப்படையின் பிரசன்னமுமே காரணமாகும். 


2009 போர் மெளனிப்பிற்கு பிறகும் கூட தமிழினத்தை நிம்மதியாக வாழ விடக்கூடாது என்கிற நிகழ்ச்சி நிரலில் படையினர் செயற்படுவதாக நாம் கருதுகின்றோம்.


அன்றைய காலத்தில் எம்மினத்தின் மீது பேரினவாதிகளால்  நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து வந்த எமது மக்களை பாதுகாப்பதற்காக வடக்கு கிழக்கில் இருந்து ராணுவம் உள்ளிட்ட முப்படைகளின் பிரசன்னத்தையும் முற்றாக அகற்ற   பொது மக்களின் சுதந்திர வாழ்வியல் இராணுவ பிரசன்னத்தை  அகற்றுவதன் ஊடாக உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையிலும் மக்களையும்,மண்ணையும் காத்திட    தமிழீழ   விடுதலை இயக்கத்தினராகிய நாம் ஆயுதம் ஏந்தினோம்.


இன்றைய சூழ் நிலையில் மக்களை அச்சுறுத்தும் அதிக இராணுவ பிரசன்னம் அதன் அடக்குமுறை இன அழிப்பு வடிவங்காரும் எமது இனத்தின் எதிர்கால இருப்பை கேள்விக்குரியக்குகின்றது. 


அந்தவகையிலேயே 18/08/2025 ம் ‘திகதி நாளைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு   தலுவிய இராணுவ பிரகன்ணத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் "ரெலோ" ஆதரவாளிக்கின்றது.


இதேவேளை இலங்கை தமிழரசுக்கட்சி அனைத்து தமிழ் தேசிய  அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்.

 

இருந்த போதிலும் இனத்தின் அடிமை  விலங்கொடிக்க ராணுவம்    உள்ளிட்ட முப்படைகளின்    பிரசன்னத்தை எமது தாயக பூமியான  வடக்கு கிழக்கில் இருந்து முற்றாக அகற்ற வேண்டும்.


 அதன் ஊடாக தமிழினத்தை சுதந்திரமாக வாழ விட வேண்டும் என்ற உயரிய நோக்கில் முப்படை களுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு   தமிழீழ விடுதலை இயக்கம் "ரெலோ" ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.






தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்.-ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ரெலோ ஆதரவு-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி Reviewed by Vijithan on August 17, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.