அண்மைய செய்திகள்

recent
-

நல்லூர் கந்தன் தேருக்கு சென்றவர்களின் வீட்டில் அரங்கேறிய சம்பவத்தால் அதிர்ச்சி !

 யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இன்றைய தினம் இடம்பெற்றது.





இந்நிலையில்  நல்லூர் ஆலயத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பத்தினர் இன்றைய தினம் காலை நல்லூர் தேர் திருவிழாவிற்கு சென்றுள்ளனர்.



இந்நிலையில் , வீட்டில் யாருமில்லாத நேரம் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டின் வரவேற்பறையில் காணப்பட்ட தளபாடங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.




வீட்டில் இருந்து பெரும் புகை வருவதனை அவதானித்த கோயிலுக்கு சென்றவர்கள் அயலவர்களுக்கு அறிவித்தது, அயலவர்களுடன் இணைந்து தீயினை அணைத்துள்ளனர்.



சம்பவத்தை அறிந்து, ஆலயத்திற்கு சென்ற வீட்டாரும் வீடு திரும்பினார். மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.







நல்லூர் கந்தன் தேருக்கு சென்றவர்களின் வீட்டில் அரங்கேறிய சம்பவத்தால் அதிர்ச்சி ! Reviewed by Vijithan on August 21, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.