தமிழர் பகுதியொன்றில் விபத்தில் பலியான பட்டதாரி யுவதி ; குடும்பத்தினர் செய்த நெகிழ்ச்சி செயல்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் டிப்பர் வாகன விபத்தில் உயிரிழந்த (31/07) சந்திரசேகரம் யதுகிரியின் ஆத்மா சாந்திக்காகவும், எதிர்கால வீதி விபத்துகளை தடுக்கும் நோக்கத்துடனும், நேற்று இரவு 7 மணியளவில் விபத்து இடம்பெற்ற இடத்தில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
அஞ்சலி நிகழ்வில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
மேலும், வாகன சாரதிகள் பாதுகாப்புடன், வீதி விதிமுறைகளை கடைபிடித்து செயல்பட வேண்டியது கடமை என வலியுறுத்தப்பட்டதோடு, ஒரே ஒரு கவனக்குறைவு, விலைமதிக்க முடியாத உயிர்கள் இழப்புக்கு காரணமாக மாறக்கூடும் எனவும் இந்த நிகழ்வில் எச்சரிக்கை கூறப்பட்டது.

No comments:
Post a Comment