கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் சூட்சுமமான முறையில் மலசலக்குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 240 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக தர்மாபுரம் பொலிசார் இன்றைய தினம் (18) மேற்கொண்ட சோதனையின்போதே குறித்த கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு
Reviewed by Vijithan
on
September 18, 2025
Rating:
Reviewed by Vijithan
on
September 18, 2025
Rating:


No comments:
Post a Comment