இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு
கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (29) காலை அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்தார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு இடையே அங்கு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர், கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக வாகனத்தை நிறுத்தி சென்றிருந்தார்.
போக்குவரத்து விதியை மீறி அவர் வாகனத்தை நிறுத்தி சென்றதாக தெரிவித்த கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரை திட்டியிருந்தார்.
அந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டிருந்தார்.
இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு
Reviewed by Vijithan
on
September 29, 2025
Rating:
Reviewed by Vijithan
on
September 29, 2025
Rating:


No comments:
Post a Comment