'அரை முழம் மல்லிகைப் பூவுக்கு ரூ. 1 லட்சம்'; விமான நிலையத்தில் நடிகை நவ்யா நாயருக்கு அபராதம்
ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் மல்லிகைப் பூவை கொண்டு சென்றதற்காக கேரள நடிகை நவ்யா நாயருக்கு அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் 1.14 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
அபராதத்தைச் செலுத்துவதற்கு 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நடிகை நவ்யா நாயர் தெரிவித்துள்ளார். விமானத்தில் மல்லிகைப் பூவை அணிந்து செல்வதில் என்ன சிக்கல்? ஆஸ்திரேலிய நாட்டின் சட்டம் என்ன சொல்கிறது?
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வசிக்கும் மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 6 ஆம் தேதி ஓணம் பண்டிகையைக் கொண்டாட திட்டமிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள நடிகை நவ்யா நாயர் பங்கேற்றார். முன்னதாக, கொச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து மெல்போர்ன் சென்றதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அதில், 'நான் மெல்போர்ன் வருவதற்கு முன்பு என் தந்தை மல்லிகைப் பூவை வாங்கித் தந்தார். அதை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொடுத்தார்' எனக் கூறியுள்ளார்.
படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வசிக்கும் மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 6 ஆம் தேதி ஓணம் பண்டிகையைக் கொண்டாட திட்டமிடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள நடிகை நவ்யா நாயர் பங்கேற்றார்.
கொச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் நேரத்தில் மல்லிகைப் பூ வாடிவிடும் என்பதால் ஒன்றை தலையிலும் இரண்டாவது பூவை கைப்பையில் உள்ள கேரி பேக்கிலும் வைக்குமாறு தனது தந்தை கூறியதாக, நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்.
"15 சென்டிமீட்டர் அளவுள்ள மல்லிகைப் பூவை கைப்பையில் கொண்டு வந்ததற்காக ஆஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள், 1980 ஆஸ்திரேலிய டாலரை (இந்திய ரூபாயின் மதிப்பில் 1.14 லட்ச ரூபாய்) அபராதமாக செலுத்துமாறு கூறினர்" என நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்.
"நான் அறியாமையில் செய்திருந்தாலும் அதை ஒரு காரணமாக முன்வைக்க முடியாது. பூ கொண்டு வந்தது சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. இதை வேண்டும் என்றே செய்யவில்லை. இதற்கான அபராதத்தை 28 நாட்களுக்குள் செலுத்துமாறு அதிகாரிகள் கூறினர்" எனவும் நவ்யா நாயர் கூறியுள்ளார்.
விக்டோரியா மாகாணத்தில் நடந்த ஓணம் திருவிழாவில் பேசியபோது இதனைக் குறிப்பிட்ட நவ்யா நாயர், "ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான மல்லிகைப் பூவை தலையில் அணிந்திருக்கிறேன்" என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
பூ, பழங்களுக்கு தடை ஏன்?
படக்குறிப்பு,"15 சென்டிமீட்டர் அளவுள்ள மல்லிகைப் பூவை கைப்பையில் கொண்டு வந்ததற்காக ஆஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள், 1980 ஆஸ்திரேலிய டாலரை (இந்திய ரூபாயின் மதிப்பில் 1.14 லட்ச ரூபாய்) அபராதமாக செலுத்துமாறு கூறினர்" என நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்.
"ஆஸ்திரேலியாவுக்கென்று தனித்தன்மை வாய்ந்த சூழலியல் உள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த பூ, பழம், விதைகள் உள்ளே நுழைந்துவிட்டால் தங்கள் நாட்டின் சூழல் மாறிவிடும் எனக் கருதுகின்றனர்" எனக் கூறுகிறார், ஆஸ்திரேலியாவாழ் இந்தியரான ஜெயச்சந்திரன் தங்கவேலு. இவர் கடந்த 22 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வர்த்தகம் செய்து வருகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், " விமானம் மூலம்
பழங்கள் (Fresh Fruits) மற்றும் காய்கறிகளைக் கொண்டு வர அனுமதியில்லை. பூ கொண்டு வருவதை அனுமதிப்பதில்லை. நெய்யால் தயாரிக்கப்பட்ட பொருள் எதையும் கொண்டு வரக் கூடாது என்பது விதியாக உள்ளது" எனவும் குறிப்பிட்டார்.
"ஆஸ்திரேலியா வருவதற்கு முன்பு சிங்கப்பூர் விமான நிலையத்தில் உணவு வாங்கி சாப்பிட்டாலும் மீதமான உணவை விமானத்தில் கொண்டு வரலாம். ஆனால், குடியுரிமை அதிகாரிகளின் சோதனைக்குச் செல்வதற்கு முன்பாக அதனை குப்பைத் தொட்டியில் எறிந்துவிட வேண்டும்" எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு.
ஆஸ்திரேலிய நாட்டின் சுங்கத்துறை அதிகாரிகளை எல்லைப் படை அதிகாரிகள் (Australian Border Force) எனக் கூறுகின்றனர். இவர்கள், ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் பயணிகளின் உடைமைகைளை ஆய்வு செய்கின்றனர்.

No comments:
Post a Comment