ஜனாதிபதி நாளை அமெரிக்காவுக்கு விஜயம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்க நோக்கி புறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் உடன் பயணிக்கவுள்ளார்
Reviewed by Vijithan
on
September 21, 2025
Rating:
.jpg)

No comments:
Post a Comment