மன்னாரில் மீன்பிடி வலைகளால் போக்குவரத்துக்கு இடையூறு
மன்னார் நகர சபை எல்லைக்குள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதிகளிலும் பொது இடங்களிலும் உலர வைக்கப்பட்ட மீன்பிடி வலைகளை இன்றைய தினம் (10) மன்னார் நகரசபை ஊழியர்கள் அப்புறப்படுத்தி கையகப்படுத்தியுள்ளனர்.
நீண்ட காலமாக மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மீனவர்கள் சிலர் ஆபத்தான முறையில் பிரதான வீதிகளிலும் உள்ளக வீதிகளிலும் வலைகளை உலரவிடுகின்றனர்.
மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இதனால் துர்நாற்றம் உட்பட விபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று நகரசபை ஊழியர்களினால் வலைகளை கையகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய முதல் கட்டமாக இன்று ஜிம்றோன் நகர் மற்றும் எமில் நகர் பகுதிகளில் உள்ள வீதிகளில் உலர விடப்பட்டிருந்த வலைகள் நகரசபையினால் அப்புறப்படுத்தப்பட்டன.
அதேவேளை போக்குவரத்துக்கும் மக்களின் நடமாட்டத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வலைகள் உலரவிடும் மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதுடன் வலைகளும் கையகப்படுத்தப்படவுள்ளது.

No comments:
Post a Comment