பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லிபியத் தலைவர் கர்னல் முயம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செயலற்ற ஊழல் மற்றும் சட்டவிரோத பிரச்சார நிதியுதவி உள்ளிட்ட வழக்கில் ஏனைய அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் பெரிஸ் குற்றவியல் நீதிமன்றம் அவரை விடுவித்தது.
கடாபியிடமிருந்து பெறப்பட்ட நிதி 2007 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
எனினும் இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்று பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி குறிப்பிட்டுள்ளார்.
70 வயதான சர்கோசி 2007 முதல் 2012 வரை பிரான்சின் ஜனாதிபதியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
September 25, 2025
Rating:


No comments:
Post a Comment