சீன ஜனாதிபதியுன் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று சந்திப்பு
சீனாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனும், நாளை அவரது பிரதி பிரதமர் லி கியாங்குடனும் இருதரப்பு சந்திப்பை நடத்தவுள்ளார்.
சீனாவில் நடைபெறும் 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பெண்கள் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரியா நேற்று சீனாவை சென்றடைந்தார்.
பிரதமரை சீனத் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் திருமதி. கவோ ஷூமின் வரவேற்றார்.
இந்த விஜயத்தின் முதல் நாளில், பிரதமர் தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சீனாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, சினோபெக்கின் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிற்கான ஒப்பந்தம் உட்பட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
October 13, 2025
Rating:


No comments:
Post a Comment