சட்டவிரோத ஜோதிட நிலையம் - இந்திய பிரஜைகள் மூவர் கைது
பருத்தித்துறை, தும்பளை வீதியில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கிய மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்தனர்.
இந்த ஜோதிட நிலையத்தை இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த மூவர் நடத்தி வந்தனர்.
இந்த விடயம் தொடர்பாக தும்பளை பிரதேச கிராம அலுவலர், பருத்தித்துறை நகரசபைத் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதனையடுத்து, நேற்று பருத்தித்துறை நகரபிதா நேரில் சென்று பரிசோதித்து, குறித்த இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினார்.
எனினும், இன்று (30) ஜோதிட நிலையம் தொடர்ந்து இயங்கியதை அடுத்து, நகரபிதா வின்சன் டி. டக்ளஸ், பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இந்தியப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்தபோது, அவர்கள் மூவரும் சுற்றுலா வீசாவுடன் நாட்டிற்குள் வந்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கிய மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்தனர்.
Reviewed by Vijithan
on
October 01, 2025
Rating:


No comments:
Post a Comment