லசந்த விக்ரமசேகர கொலை - துப்பாக்கிதாரி சிக்கினார்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹரகம - நாவின்ன பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதற்கு அரச புலனாய்வு சேவையும் ஆதரவு அளித்துள்ளது.
லசந்த விக்ரமசேகர கொலை - துப்பாக்கிதாரி சிக்கினார்
Reviewed by Vijithan
on
October 26, 2025
Rating:
Reviewed by Vijithan
on
October 26, 2025
Rating:


No comments:
Post a Comment