களுத்துறையில் பணத்தை திருடும் காகம்
களுத்துறை பாதுக்க பிட்டும்பே பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, பொது மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற குறும்பு செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. குறித்த காகத்தினால் நாளுக்கு நாள் தொந்தரவுக்கு உள்ளாகும் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இந்தக் காகம் யாரோ ஒரு வீட்டில் வளர்க்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த காகம் வங்கிகளுக்கு அருகிலுள்ள கடைகள் மற்றும் பகுதிகளுக்குள் பறந்து பணத்தை எடுக்கிறது. கடை ஒன்றுக்குள் நுழைந்த காகம் அங்கிருந்து பணத்தை திருடிச் செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அந்தக் காகம் கடைகளுக்கு சென்று, மலம் கழித்து, மக்களின் உடலில் எந்த பயமும் இல்லாமல் அமர்ந்திருக்கும் பழக்கத்தை கொண்டுள்ளது.
அந்தப் பகுதியிலுள்ள அலுவலகம் ஒன்றுக்கு சென்ற பெண் ஒருவரின் உடலில் காகம் அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த காகத்திற்கு எதிராக துறைசார் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Reviewed by Vijithan
on
October 17, 2025
Rating:


No comments:
Post a Comment