பிரான்ஸில் இருந்து யாழிற்கு சைக்கிளில் வந்த ஈழத்தமிழ் இளைஞன்
பிரான்ஸில் இருந்து சுமார் 13 நாடுகளை சைக்கிளில் கடந்து சுமார் 10,000 கிலோமீட்டர் பயணம் செய்த இளைஞர் இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.
பாரிஸில் இருந்து யாழ்ப்பாணம் என்ற தலைப்பில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரான்ஸில் வசிக்கும் நல்லூரை சேர்ந்த, 28 வயது இளைஞர் சூரன் என்பவரால் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம் வந்தடை பிரான்ஸ் வாழ் இளைஞனுக்கு வரவேற்று அளிக்கப்பட்டது. தனது பயணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர்,
“கடந் செப்டம்பர் முதலாம் திகதியன்று பாரிஸிலிருந்து இந்தப் பயணத்தை ஆரம்பித்தேன்.
பிரான்ஸ், ஜெர்மனி, ஒஸ்ரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா வழியாகப் பயணம் செய்து, இன்று யாழ்ப்பாணத்தை அடைந்துள்ளேன்.
இதற்காக சுமார் 10,000 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் பயணித்தேன்.
எனது குடும்பத்துடன் மீண்டும் இணைவது மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தின் கலாச்சார முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதும் எனது நோக்கமாகும்.
யாழ்ப்பாணத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்தோர் தங்கள் தாயகத்துடன் வலுவான உணர்ச்சி மற்றும் கலாச்சார தொடர்புகளைப் பேணுவதற்கு ஊக்கமளிப்பதற்கும் ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பை உருவாக்க விரும்புவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reviewed by Vijithan
on
October 23, 2025
Rating:


No comments:
Post a Comment