ஏ 09 பிரதான வீதியில் தாயை பிரிந்த குட்டியானை மீட்பு
யாழ்ப்பாணம் - கண்டி ஏ 09 பிரதான வீதியின் கெக்கிராவை எலகமுவ வயல் பகுதியில் யானைக்குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மஸ்தான் பாலத்திற்கு அருகிலுள்ள கால்வாய் பகுதியில் தாய் யானையிடம் இருந்து பிரிந்த யானைக்குட்டி ஒன்றினை அநுராதபுரம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் பாதுகாப்பாக இன்று செவ்வாய்க்கிழமை (14) மீட்டுள்ளனர்.
யானைக்குட்டிக்கு சிகிச்சை
யானைக் கூட்டம் ஒன்று கெக்கிராவை எலகமுவ வயல்பகுதி ஊடாக பிரதான வீதியினை கடந்து கலாவெவ குளத்துப் பகுதிக்கு நேற்று (13) இரவு நேரத்தில் சென்றுள்ளது.
இதன்போது பிரதேசவாசிகள் சிலர் தாய் யானையிடம் இருந்து பிரிந்த யானைக்குட்டி ஒன்றினை கட்டிவைத்து விட்டு கெக்கிராவை பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் யானைக் குட்டியினை கொண்டு வந்துள்ளனர்.
யானைக்குட்டிக்கு சிகிச்சையளித்து பராமரிப்பதற்கான வேண்டி வடமேல் மாகாண வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் நிக்கவரெட்டிய கால்நடை வைத்தியர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
October 14, 2025
Rating:


No comments:
Post a Comment