கொழும்பில் உள்ள அதி சொகுசு ஹோட்டலில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட நபர்
கொழும்பில் உள்ள கனவு நகரத்தில் (City of Dreams) உள்ள நுவா என்ற சொகுசு ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 45 வயதுடைய ஒருவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் நான்கு நாட்களாக ஹோட்டலில் தங்கியிருந்தார். கதவு பூட்டப்பட்டிருப்பதை ஹோட்டல் ஊழியர்கள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கியுள்ளனர்.
பின்னர் ஹோட்டலுக்கு வருகை தந்த பொலிஸார் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையில் தூக்கில் தொங்கியதால் மரணம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கண்டியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக திறக்கப்பட்ட கனவு நகர கேசினோவில் சூதாட்டத்தில் பெரும் தொகையை இழந்த பிறகு இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
Reviewed by Vijithan
on
October 02, 2025
Rating:


No comments:
Post a Comment