மன்னார் நகரசபை செயலாளர் யோகேஸ்வரம் நிர்வாக சேவைக்கு பதவி உயர்வு
இலங்கை நிர்வாக சேவை தரம் 3 க்கு திறமை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சையின் அடிப்படையில் கடந்த 2024 இன் போட்டிபரீட்சை பெறுபேற்களுக்கு அமைவாக 41 பேர் இலங்கை நிர்வாக சேவை தரம் 3 க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
அதில் ஐவர் வடமாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டன் பிரதேச சபை மன்னார் நகரசபை உள்ளடங்களாக செயலாளராக கடமையாற்றிய யோகேஸ்வரம் இன்று அமுலுக்கு வரும் வகையில் இலங்கை
நிர்வாக சேவை உத்தியோகஸ்தராக பதவி உயர்வு பெற்றுள்ளார்
இம்முறை வடமாகாணத்தில் 5 பேர் நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இவர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளார்
யோகேஸ்வரன் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பழைய மாணவன் என்பதுடன் இவர் 2002 ஆண்டு எழுதுனராக அரச சேவைக்கு நியமனம் பெற்று 2012 தொடக்கம் முகாமைத்துவ சேவை அதிசிறப்பு தரத்திற்கு பதவி உயர்வு பெற்று மாவட்டத்தில் உள்ள பல உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளராக நேர்மையாக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Vijithan
on
October 01, 2025
Rating:




No comments:
Post a Comment