அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் சட்டவிரோத மதுபானம். பெண்கள் உட்பட 10 பேர் கைது, பொலிஸார் மீதும் தாக்குதல்

 கிளிநொச்சியில் சட்டவிரோத மதுபானச் சாலை ஒன்றை சோதனையிடச் சென்ற பொலிஸ் அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்திய குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஐந்து ஆண்கள், ஐந்து பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கைதான ஆண் சந்தேக நபர்கள் 16 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், பெண் சந்தேக நபர்கள் 26 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரவித்தனர். இவர்கள் அனைவரும் கிளிநொச்சி இராமநாதபுரம் சுடலகுளம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.


நேற்று இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைதான அனைவரும் இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


இராமநாதபுரம் பொலிஸ் பிரிவின் சுடலகுளம் பிரதேசத்தில், பொலிஸ்  அதிரடிப் படையினர், சட்டவிரோத மதுபான சோதனையை நடத்தச் சென்றபோது, ​​இரும்பு கம்பிகள், தடிகளினால் தாக்கப்பட்டனர். மறைந்திருந்து தாக்கியவர்களை, பின்னர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர்.


தாக்குதலினால், காயமடைந்த இரண்டு பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





கிளிநொச்சியில் சட்டவிரோத மதுபானம். பெண்கள் உட்பட 10 பேர் கைது, பொலிஸார் மீதும் தாக்குதல் Reviewed by Vijithan on November 03, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.